About Trust
உதவிடுங்கள் இது உங்களின் அறக்கட்டளை:
அண்பு என்னும் அருமருந்து தந்திட்ட நன்மைகளைப் பெற்றுக்கொண்ட நியும் பிறருக்கு அதைக் கொடு என என் மனது புற்று நோயாளிகளுக்காகத் தவித்து கொண்டிருக்க
நானும் அவர்களில் ஒருவனாகிப்போன காரணத்தால் எண்ணங்களைக் செயல்களாக்கிட ஒரு அறக்கட்டளை நிறுவி உதவிகள் செய்திடவேண்டும் என்பது எனது
நீண்ட நாள் கனவு இறைவனின் கருணையினாலும், உங்கள் அன்பினாலும் மட்டுமே இன்றைக்கும் ஜீவனோடு இருப்பதால் எண்ஜிய வாழ்நாட்களை இன்னும்
அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்திட மீண்டும் ஒருமுறை உங்களின் பிரார்த்தனையையும் உதவியையும் நாடுகிறேன்..
பல்வேறு சூழ்நிலைகளிலும் பொறுப்புகளிலிருந்தும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் நோயாளிகளின் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில்
நான் Osteoclasatoma என்னும் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடலில் 9 இடங்களில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு கடந்த 1993 முதல் சிகிச்சை எடுத்து வருகிறேன்.
அதிலும் 1997 ஆண்டிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணையில் புற்றுநோய் மருத்துவஇயல் பிரிவில் 225 வது வார்டில் கீமோதெரபி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த
போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பல. இந்த அனுபவங்களே என் உண்னம் அவர்களுக்காக ஏதாவது உதவிகள் செய்திட வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்திருந்தது.
என்னோடு சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த வயது முதிர்ந்த பெரியவர்கள் நோயினால் படும் வேதனைகள் ஒருபுறம் அதிலும் உதவிசெய்திட வாரிசுகணே அல்லது உறவினர்களோ
இன்றி தவிப்பவர்கள் படும் வேதனை, சிறுவர்களின் துயரம் அவர்களைப் பெற்றவர்களின் கண்ணீர், படிக்கிற பிள்ளைகளை உடைய பெற்றோர் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுமோ
என்ற கவலையையும் சேர்த்தே சுமக்கிற சோகம், கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களின் வேதனை இவைகளைச் சொல்லி முடியாது. இவர்களுக்கு நல்ல
நம்பிக்கையையும் அதனூடே இயன்ற உதவியையும் செய்வது அவசியம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறைவன் அருளால் நலமுடன் இருக்கும் எனக்கு அந்த பாக்கியம்
கிடைப்பதை நேசிக்கிறேன். இந்த டிரஸ்ட்-க்கு உங்களின் மனப்பூர்வமான உதவிகளை அளித்திட வேண்டுகிறேன். அண்புடன் பிலிப் ஜெயசேகர்.
நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட்ட நம்பிக்கை:
நோக்கம் செயலாக்கம் – அங்கலாய்த்து இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு ஒரு நல்நம்பிக்கையின் கீற்றாய் இருத்தல்
வொண்டர்புல் சர்விங் டிரஸ்ட் பதிவுசெய்துள்ளது ஆச்சரியமான உங்களின் அறக்கட்டளை. ஒன்றல்ல. தனது பெயயரை ஏனென்றால் இது
நாம் காணும் யாவுமே அதிசயம்தான். நம்போன்று கண்ணால் காணமுடியாத, ஊயால் பேசமுடியாத, நடக்கமுடியாத,
மனவளம் பெறாத தெய்வக் குழந்தைகள் யாவருமே அதிசயத்தின் ஒருபகுதி தான் – நாம் உப்பட வெமும் கண்களால் மட்டும் அதனைப் பார்த்து தெரிந்துகொள்ள இயலாது.
அண்பும் மணதுருக்கமும் ஒற்றியெடுத்த கண கனர்கனால் மட்டுமே காணமுடியும். சேர்ந்து
நோயால் பாதிக்கப்படும் அனைவருமே ஆறுதலையும், தேறுதலையும் அதிகமாக விரும்புவது இயற்கை.
அதிலும் என்போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்பவர்களுக்கு இவை தேவைப்படுகிறது. – இது மிகையல்ல. மிகவும் அதிகமாகத்
இதனை கடந்த 1997 ஆம் வருடம் முதல் நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என்று மதுரை அரசு ராணுஜி மருத்துவமணையில் 225 வர்டில்
புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான் நேரில் பார்த்து அனுபவங்களில் தெரிந்துகொண்டதன் வினைணக படுக்கையில் கண்ணீர்மல்க இறைவனை
நோக்கி WONDERFUL SERVING TRUST ஐ தெடங்க எண்ணினேன்.
அதை உங்களின் அறக்கட்டளையாக்கி, நல்நம்பிக்கையை தர எண்ணி அதுவும் நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட்ட நம்பிக்கையாக இருக்கச்செய்திட வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.
“உதவிடுங்கள் இது உங்களின் அறக்கட்டளை”
வாய்ப்புகள் நமக்குக் கிடைப்பதில்லை அவைகள் நமக்குக் கொடுக்கப்படுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தாங்கள் எப்பொழுதாவது சந்தித்துள்ளீர்களா?
அவர்கனோடு பேசி அவர்கள் படும் வேதனையை அறிந்துள்ளீர்களா? இல்லை தங்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது அருமை நண்டர்கள் யாருக்காவது இதன் பாதிப்புகள் இருந்ததா?
தொடர்ந்து உங்களை கேள்வி கேட்கும் நோக்கம் எனக்கில்லை. உங்களின் அன்பு மனதிற்கு ஆறதல் அளிக்கும் விதமாகவே இந்த அறக்கட்டளையைத் தொடங்கி உண்ளோம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவயர்களுக்கு நோயைப்பற்றிய விழிப்புணர்வை எடுத்துச்சொல்லியும் நல் நம்பிக்கையான
தண்ணம்பிக்கையையும் ஏற்படுத்தி, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், உணவையும் வழங்கி ஆறுதல் படுத்திடவும், உங்களின் சார்பில் அவர்களைத் தேற்றிட செய்யவுமே
அறக்கட்டளைக்கு தாராளமாக உதவிடுங்கள்.
உங்களின் நல்எண்ணம் எங்களின் நற்செயலாகும். நல் தனி நலம் குன்றிய புற்றுநோயளிகளுக்கு நல்வாழி காட்டிடும்.
அண்புடன் பிலிப் ஜெயசேகர்.